படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
சென்னை அடுத்த புழல் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மகன் சபரி (3). நேற்று முன்தினம் தனது வீட்டு மாடியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கால் தவறி படிகளில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.