இந்தியாவில் 'ஒமிக்ரான்' வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவருவதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று (23/12/2021) பகல் 12.00 மணியளவில் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
ஒமிக்ரான் பரவலைத் தடுப்பது குறித்தும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.