Skip to main content

சென்னை திரும்பிய முதல்வர்; அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு

Published on 14/09/2024 | Edited on 14/09/2024
Chief Minister returned to Chennai; Ministers enthusiastic welcome

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா சென்ற நிலையில் தினந்தோறும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அதேபோல் அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

முதல்வரின் இந்த அமெரிக்க பயணத்தில் மொத்தமாக தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது.  ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை புறப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரை அங்கிருந்த தொண்டர்கள் வழி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் 'Goodbye, USA!' (போய் வருகிறேன் அமெரிக்கா) என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியுள்ளார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட முதல்வர் துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய தமிழக முதல்வரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

சார்ந்த செய்திகள்