கரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.
கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று மருத்துவமனையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒரு வார காலத்திற்கு முதலமைச்சர் ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து, ஓய்வுக்கு பிறகு மீண்டும் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.
செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கூட்டம் குறித்த ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், செஸ் ஒலிம்பியாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.