சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (22/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'இ- முன்னேற்றம்' மற்றும் 'தகவல் தொழில்நுட்ப நண்பன்' ஆகிய இரண்டு வலைத்தளங்களையும், 'கீழடி- தமிழிணைய விசைப்பலகை' மற்றும் 'தமிழி- தமிழிணைய ஒருங்குறி மாற்றி' ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையின் ஆலோசகர், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர், மின்-ஆளுமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையின் முதன்மைச் செயல் அலுவலர், தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இயக்குநர், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையின் இணை முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.