Skip to main content

ஆளுநர் மீது புகார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம்

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

Chief Minister M. K. Stalin's letter to the President complaining about the Governor

 

தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களைக் கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாகச் செயல்படுவது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

 

பல்வேறு விவகாரங்களிலும் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்கவும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இதுமட்டுமின்றி பல்வேறு விவகாரங்களிலும் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

 

இதுமட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்கவும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

 

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 15 பக்க கடிதம் எழுதியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அந்த கடிதத்தில் அமைச்சர்  செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டது, அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முயல்வது குறித்து  எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது டெல்லி பயணத்தை முடித்து கொண்டு ஜூலை 13 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்