Published on 02/01/2022 | Edited on 02/01/2022
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வரும் ஜனவரி 4- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. சுமார் 2.15 குடும்பங்களுக்கு ரூபாய் 1,088 கோடி செலவில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பை வழங்கப்படவுள்ளது. மேலும், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் காரணமாக, நியாய விலைக்கடைகள் ஜனவரி 7- ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.