Skip to main content

''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

Chief Minister Edappadi Palanichamy press meet

 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக திண்டுக்கல்லின் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். அதனையடுத்து  தற்போது செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

இ-பாஸ் பெறுவதற்கு ஒரே குழு மட்டும் இருந்த நிலையில், தற்போது எளிமையாக இ-பாஸ் பெறுவதற்காக இரு குழுக்கள் அனைத்து மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இ-பாஸ் பெறுவது எளிமையாகப்படும்  என தெரிவித்தார்.

 

நேற்று எஸ்.வி.சேகர் அ.தி.மு.க குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,

 

எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எப்படி அவருக்கு தெரியும். அவரையெல்லாம் ஒரு பெரிய கட்சி தலைவராகவே நான் கருதவில்லை. அவர் முதலில் எந்த கட்சி என கேள்வி எழுப்பிய முதல்வர், அதேபோல் பாஜகவை விட்டு நாயினார் நாகேந்திரன் அ.தி.மு.கவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் எனவும், இருமொழிக் கொள்கை என்பதே தமிழகத்தில் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்