Skip to main content

ஊரடங்கில் முடங்கி கிடக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய சிதம்பரம் கோயில் தீட்சதர்கள்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. தினந்தோறும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஒவ்வொரு நாளையும் மிகவும் சிரமப்பட்டு கடத்தி வருகின்றனர்.

 

Chidambaram Temple Dikshitars Provide Food To Poor People



இந்நிலையில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பாஸ்கர தீட்சிதர் தலைமையில், கடந்த ஒருவாரமாக விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, தினந்தோறும் 150 வீடுகளுக்குமேல் சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை சிதம்பரம் நகரத்தில் குடிசை பகுதியான கரியபெருமாள் குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உணவுகளை வழங்கினார்கள். இதனை மக்கள் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான உணவுகளை பாத்திரம் எடுத்து வந்து வாங்கி சென்றனர். மேலும் இதுபோன்ற நேரத்தில் உணவு வழங்கியது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தீட்சிதர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். உணவு ஏழைமக்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து வழங்கப்படும் என்று தீட்சிதர்கள்  கூறுகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்