Skip to main content

விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் நடந்துகொள்வது தலைவருக்கு அழகல்ல: ஜி.ராமகிருஷ்ணன்!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018


அரசியல் கட்சி தலைவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என புகார் அளிப்பது, மாநில தலைவருக்கு அழகல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கோவை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரம் குடிநீர் விநியோகத்திற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிர்வாகத்துடன் போட்டுள்ள ஒப்பந்ததை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஐந்து அலுவலங்கள் முன்பும் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட உள்ள அமைப்புகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், உடனடியாக மக்கள் போராட்டங்கள் மூலம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கோவை தேசிய பஞ்சாலை தொழிலாளர்களின் பேச்சு வார்த்தைக்கு இது வரை நிர்வாகம் வரவில்லை உடனடியாக அழைத்து பேச வேண்டும்.

மாணவி சோபியா விவகாரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மனித உரிமையை பறிக்க கூடிய நிலையை மத்திய மாநில அரசு மேற்கொண்டுள்ளது. பெண்ணின் தந்தை பாஜக தலைவர் மீது புகார் அளித்துள்ளார், ஆனால் அந்த புகார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தலைவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என புகார் அளிப்பது, மாநில தலைவருக்கு அழகல்ல.

கேரளா முதல்வர் பிணராய் விஜயன் தலையை கொண்டு வந்தால் 1 கோடி ரூபாய் என அறிவிப்பை வெளியிட்டனர், ஆனால் தொண்டர்கள் ஆவேசத்தில் பேசுவதை எல்லாம் பெருட்படுத்த முடியாது, அமைதியாக தான் இருந்தார்.

 

சார்ந்த செய்திகள்