Skip to main content

சிதம்பரம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ3.53 லட்சம் கொள்ளை!

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
சிதம்பரம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம்
ரூ3.53 லட்சம் கொள்ளை!


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக கருணாநிதி பணியாற்றுகிறார். இவர் நேற்று இரவு கடையில் விற்பனையை முடித்துவிட்டு பைக்கில் பணத்துடன் சின்னாண்டிக்குழி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

ரயில்வே கேட்டை கடந்து சென்ற போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கருணாநிதி பைக் மீது மோதி கீழே தள்ளி விட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த கருணாநிதி சிசிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார்  வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்