Skip to main content

சென்னையின் மிக நீண்ட பாலம் திறப்பு!

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

Chennai's longest bridge opens!

 

சென்னையில் கட்டப்பட்டுள்ள மிக நீண்ட நீளம் கொண்ட பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 

சென்னை வேளச்சேரி- தாம்பரம் இடையே மேடவாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தைத் தமிழக மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 2.03 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 11 மீட்டர் அகலம் கொண்டது. சென்னையின் மிக நீண்ட பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த பாலம் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இன்று மக்கள் சேவைக்கு இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்