Skip to main content

சிலைகளை மீட்ட காவலர்கள்; டிஜிபி பாராட்டு

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

chennai raja annamalaipuram god statue police recovered

 

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த மாதம் 10 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை சோதனை நடத்தியதில் ஷோபா துரைராஜன் என்பவரிடமிருந்து சுமார் 400 வருடப் பழமை வாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 10 பழங்காலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடம் இருந்து சிலைகள் மீட்கப்பட்டன.

 

மீட்கப்பட்ட சிலைகளில இருந்த விநாயகர் உலோக சிலை நாட்டார்மங்களம் கோயிலில் இருந்து திருடப்பட்டதாகத் தெரியவந்தது. அந்த சிலை தற்போது சம்பந்தப்பட்ட கோயிலில் ஒப்படைக்கப்படவுள்ளது. மற்ற சிலைகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட கோவில்களிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட உள்ளன. மேலும், முதல் கட்ட விசாரணையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள 10 சிலைகளும் பிரபல சிலை கடத்தல்காரரான தீனதயாளன் என்பவரிடமிருந்து 2008 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் வாங்கப்பட்டதாக ஷோபா துரைராஜன் தெரிவித்தார்.

 

பழமை வாய்ந்த சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை காவலர்களை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்