Skip to main content

வழிப்பறி; எஸ்.ஐ., ஐ.டி. அதிகாரிகள் உட்பட 4 பேர் கைது!

Published on 18/12/2024 | Edited on 18/12/2024
Chennai Omandurar Hospital Near incident SI 4 IT officers arrested

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் முகமது கௌஸ் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அச்சமயத்தில் அங்கு ரோந்து பணியில் இருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றியுள்ளார். மேலும் இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ராஜாசிங் தனது உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

அதோடு தனக்கு தெரிந்த 3 வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து 4 பேரும் தலா 5 லட்சம் என 20 லட்சத்தை பங்கிட்டு கொண்டனர். அதே சமயம் முகமது கௌஸை, வருமான வரித்துறை அதிகாரிகளான 3 பேரும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் கூட்டு வழிப்பறி என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து திருவல்லிக்கேணி எஸ்.ஐ. ராஜா சிங், வருமானவரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப் மற்றும் பிரபு என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் 20 லட்சம் ரூபாய் வழிபறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்