குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக மேல் வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி (Surcharge) மாதத்திற்கு 1.25 என்ற சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்படும். தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25% என்ற விகிதத்தில் மேல் வரி (Surcharge) வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.25% இருந்து 1.7.2023 முதல் 1% குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது. எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வரை) உள்ள நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்படுள்ளது.