Published on 16/09/2020 | Edited on 16/09/2020
கரோனா ஊரடங்கு காரணமாகச் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள மொத்த மளிகை வியாபார கடைகள் கடந்த ஏப்ரல் 27 -ஆம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டபோது வணிகர்கள், கோயம்பேடு மார்கெட்டையும் திறக்க அனுமதி வேண்டும் என்று வலியுறுத்திவந்தனர்.
அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோயம்பேடு மார்க்கெட்டை நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் செப்டம்பர் 18 -ஆம் தேதிமுதல் கோயம்பேடு மளிகை வியாபார மார்கெட்டை முதலில் திறப்பதற்கு அனுமதி அளித்தார். இந்த அனுமதியைத் தொடர்ந்து கடைகளுக்கு வெள்ளை அடிப்பது, பழுதுபார்ப்பது என மார்க்கெட்டை சுத்தப்படுத்தும் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.