Published on 16/03/2019 | Edited on 16/03/2019
12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். ரசிகர்கள் நீண்ட கியூவில் நின்று குறைந்தபட்ச டிக்கெட்டின் விலையான ரூ.1,300யை வாங்கி சென்றனர். ஒருவருக்கு 2 டிக்கெட்டுகளே கொடுக்கப்பட்டது.
இதேபோல ரூ.2,500, ரூ.5,000, ரூ.6,500 விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. நாளை முதல் காலை 10 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். டிக்கெட் விற்பனையையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.