ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருப்பார் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கவேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தயார் அற்புதம்மாள் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருப்பார் எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், முடிவெடுப்பதற்கான காலகட்டம் எதுவும் வழங்கப்படாததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.