Published on 04/01/2019 | Edited on 04/01/2019

தமிழகத்தில் குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமால் 2.15 இலட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ஜனவரி 25-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி இருவரும் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மாஜிஸ்திரேட்டுகளும் இயந்திரத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.