Skip to main content

சென்னை: அடையாறு மண்டலத்தில் இரண்டாயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020


 

chennai coronavirus zones peoples

சென்னை அடையாறு மண்டலத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது. 

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (17/06/2020) மாலை நிலவரப்படி, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ள நிலையில், 27,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 21,990 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் 576 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 

chennai coronavirus zones peoples


சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை இன்று (18/06/2020) வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,626 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 3,801, திரு.வி.க.நகர் 3,160, திருவொற்றியூர் 1,324, மாதவரம் 955, தண்டையார்பேட்டை 4,549, அம்பத்தூர் 1,243, தேனாம்பேட்டை 4,334, வளசரவாக்கம் 1,497, அண்ணாநகர் 3,636, அடையாறு 2,069, பெருங்குடி 684, சோழிங்கநல்லூரில் 677, ஆலந்தூர் 736, மணலி 503, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 762 பேர் என மொத்தம் 35,556 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

chennai coronavirus zones peoples


இதில் 19,027 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 461 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 16.067 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்