Skip to main content

கரோனா தொற்று: சென்னையில் ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்யேக தொலைபேசி எண் அறிவிப்பு!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020
chennai coronavirus 108 ambulance  new landline number announced


கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை பெற பிரத்யேக தொலைபேசி எண்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்தவும், சிகிச்சைகள் மேற்கொள்ளவும், அவ்வப்போது மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை நாள்தோறும் எடுத்து வருகிறது. 

தமிழ்நாட்டில் 108 அவசரகால ஊர்தி சேவை 24 மணி நேரமும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கோவிட்- 19 நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவையும் திறம்பட சமாளித்து வருகிறது. இச்சவாலான சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்புகளை கையாளும் விதமாகவும், கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்று அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்பவும், கோவிட்- 19 நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

 

 


இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 044- 40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும். இதன்மூலம் கரோனா கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை முறைகள் மேலும் தமிழ்நாட்டில் வலுப்படும்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்