
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக இரண்டு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அந்த தடை நீக்கம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தியாகராயநகர் உட்பட ஒன்பது இடங்களில் அங்காடிகள் வணிக வளாகங்கள் திறக்கப்பட இருக்கின்றன. டி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் உள்ளிட்ட 9 இடங்களில் வணிக வளாகங்கள் செயல்பட விதிக்கப்பட்ட தடை நாளை காலையுடன் முடிவடையும் நிலையில் வழக்கம் போல செயல்பட அனுமதி என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே திருப்பூர், நாகை மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்திருந்தது. அதேபோல் கோவையிலும் கரோனா அதிகரித்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. சேலம் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.