Skip to main content

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

நாட்டின் 71வது ஆண்டு சுதந்திர தின விழா, இம்மாதம் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சீர்க்குலைக்க, தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரயில்  நிலையங்கள், மக்கள் கூடும் வழிப்பாட்டு தலங்கள், வியாபார வணிக வளாகங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும், நுழைவாயிலில் நிறுத்தி, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்திய பின்னரே, உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

சார்ந்த செய்திகள்