Skip to main content

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

Published on 09/08/2017 | Edited on 09/08/2017

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு


தென்னிந்திய விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும் என்று கொல்கத்தா விமான நிலையத்துக்கு தொலைபேசியில் மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்துள்ளான்.

கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு நேற்று (19.03.09) மாலை 3.45 மணியளவில் மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், இந்தியில் பேசியவர், தென்னிந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இன்று காலை 7 மணிக்குள் தொடர் குண்டு வெடிக்கும் என்று கூறி வைத்து விட்டான்.

இதுபற்றி டெல்லி தலைமை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, வேலூர் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. தீவிர சோத னைக்கு பிறகே விமான நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக் கப்படுகி றனர்.

சார்ந்த செய்திகள்