அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுமிக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில் தற்பொழுது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேர் உடல்நிலையும் தற்பொழுது வரை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனில் இருந்து இந்தியா வந்த 45 வயதுடைய அந்த நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுமிக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் விமான நிலைய மருத்துவக்குழுவினர் சிறுவனை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.