சென்னையில் தம்மை சந்திக்க வருபவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கையடக்க அளவிலான கலைஞரின் சிலையை அளித்து வருவது, அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே பாணியில் திமுக அமைச்சர் ஒருவர் கட்சிகாரர்களை கையடக்க கலைஞர் சிலையை கட்சியினரை வாங்க வைத்து ஆன்மீக அரசியலுக்கு அடி போடுகிறார் என்கிற பேச்சு கட்சியினர் இடையே உள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சி அமைச்சர்கள் அலுவலங்கள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். கூட்டத்தின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். கட்சிகாரர்கள் மாதம் பணம், கமிஷன், என ஏக பரபரப்பாக இருக்கும். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர்களில் முக்கியமானவர் திருச்சி கே.என்.நேரு. அவருடைய அலுவலகம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் அதே மாதிரி தான் அவருடைய அலுவலகத்தில் கட்சிக்காரர்கள் நிரம்பி வழிந்தது.
அப்போது கே.என்.நேருவும் மேசையில் இருந்த குட்டி கலைஞர் சிலைக்கு பயபத்தியுடன் மாலை மல்லிகைபூ போட்டு வணங்கி கொண்டிருந்தார். ஏற்கனவே அத்திவரதர் பார்க்க குடும்பத்துடன் சென்றவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் உடன் இருந்த நகர செயலாளர் அன்பழகனிடம் தலைவர் கலைஞர் சிலை செய்த சிற்பியிடம் 1 இலட்ச ரூபாய்க்கு 10 சிலை வாங்கி வந்தேன்.
உங்கள் வீட்டிற்கு தலைவர் சிலை வாங்கி கொண்டு போய் வையுங்கள் என்று கே.என்.நேரு சொல்ல சரிங்கண்ணே என்று 10,000 ரூபாய் கொடுத்து ஒரு குட்டி கலைஞர் சிலையை வாங்கினார். உடனே அடுத்த மண்டி சேகர், செவ்வந்திலிங்கம், வழக்கறிஞர் பொன்முருகேஷன், உள்ளிட்டோர் அடுத்தது சிலையை பயபக்தியுடன், சிலையை வாங்கிகொண்டே இருக்க கடைசியில் சிலை பரபரப்பான விற்பனையில் சிலை தீர்ந்து போக கலைஞர் சிலைக்கு டிமாண்ட அதிகமாக உடனே சிலை வடித்த சிற்பிக்கு போன் போட்டு இன்னும் சிலைகள் வேண்டும் என்று ஆர்டர் போட்டார். ரஜினி ஆன்மீக அரசியல் செய்வேன் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில் திமுக அமைச்சர் ஒருவர் கலைஞர் சிலையை வைத்து ஆன்மீக அரசியலை ஆரம்பித்து வைக்க கட்சியினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.