அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களிலும், வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்து கிட்டத்தட்ட 19 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று பலரும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் தான் ஆட்சியிலிருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 40 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் மீது தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் 10000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.