தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், திண்டுக்கல், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.