வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சியில் மழை பெய்யக்கூடும். கரூர், திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
மேலும் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சியில் மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.