Skip to main content

‘கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Chance of heavy rain Meteorological Department statement

 

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (25.11.2023) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (25.11.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 28 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்