Published on 11/07/2021 | Edited on 11/07/2021
![Chance of heavy rain in Coimbatore and Nilgiris!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ld7Yq7dopfyur0bbFKR21mJ6JJo80ShKT6Dcj_Bfpls/1625999042/sites/default/files/inline-images/ra1_6.jpg)
கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் தேனியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 10 சென்டி மீட்டர் மழையும், சோலையாறு 8 சென்டி மீட்டர், வால்பாறை 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.