இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இலங்கை முழுவதும் ஒவ்வொரு வீடு வீடாக இலங்கை ராணுவம் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக பன்னாட்டு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் நடந்த தாக்குதல் கர்நாடகா மாநிலங்களில் முக்கிய பகுதிகளான பெங்களூரு மற்றும் மைசூர் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைப்பெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை கர்நாடகா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷ்னர் சுனில் குமார் கூறுகையில் ' பதற்றம் நிறைந்த பகுதிகள் , மார்க்கெட்டுகள் , வழிபாட்டுத்தலங்கள் ,வணிக வளாகங்கள் , மல்டி ப்ளக்ஸ் , ஏர்போர்ட் , ரயில்வே நிலையங்கள் , பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல் ஓட்டல்கள் , பப்புகள் , ரெஸ்டாரண்ட் , திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு , மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவற்றை தங்களது இடங்களில் உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

மத்திய உளவுத்துறை எங்களுக்கு அவ்வப்போது தகவல்கள் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றனர். நாட்டின் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூரு இருக்கிறது. இங்கு ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அனைவருக்கும் , அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது போலீஸாருக்கு முடியாத காரியம் .
எனவே முடிந்த வரை ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் நடந்து கொண்டு அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனறு பெங்களூரு போலீஸ் கமிஷ்னர் தெரிவித்தார். ஆகையால் பெங்களூரு மற்றும் மைசூரில் தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் விடிய விடிய போலீஸார் ரயில் நிலையங்கள் , பேருந்து நிலையங்கள் , ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சென்னையில் தீவிரவாதி ஒருவரை சுற்றிவளைத்து காவல்துறை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருவது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சந்தோஷ், சேலம்.