Published on 09/01/2019 | Edited on 09/01/2019
தேசிய அளவில் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி 48 மணி நேர வேலைநிறுத்தம் நேற்று காலை தொடங்கியது. இதனால் மத்திய அரசு அலுவலங்களான தபால் துறை, வருமான வரி, துறைமுக பொறுப்புக் கழகம், கணக்கு தணிக்கை துறை உள்பட ஏராளமான அலுவலகங்கள் வெளிச்சோடி காணப்பட்டன.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக் கூடாது, தொழிற்சங்கங்ளின் சட்டங்களை திருத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.