Published on 28/12/2019 | Edited on 28/12/2019
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் செல்போன் பயன்பாடு தலைதூக்கி இருப்பதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறைக்காவலர்கள் யார்டு-2 அறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த11 செல்போன்கள், சிம்கார்டு மற்று சார்ஜர் முதலியவற்றை கண்டறிந்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.