காவிரி டெல்டாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான அளவு ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடும் மகிழ்ச்சிகரமான நிலையில், அதனை வரவேற்கும் விதமாக, ஆடி பெருக்கு அன்று மதியத்திற்கு மேல் 1/2 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர், பி.ஆர்.பாண்டியன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி டெல்டாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான அளவு ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடும் மகிழ்ச்சிகரமான நிலையில் அதனை பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண் ஊழியர்கள் குதூகளத்தோடு ஆடி பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் மதியத்திற்கு மேல் 1/2 நாள் தமிழக அரசின் சார்பில விடுப்பு அளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
இதனை தமிழக முதலமைச்சர் உணர்ந்து அரை நாள் அரசு விடுமுறை அறிவித்திட அன்புடன் வேண்டுகிறேன். காவிரி தாயின் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் அமையும் என விவசாயிகள் சார்பில் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.