காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த 22 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டது.
போலீசார் தொடர்ந்து இந்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில், வருவாய்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 15 கிலோ வெடி மருந்துகள் வைக்க வேண்டிய இடத்தில் 300 கிலோ வெடி மருந்துகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமான வெடி பொருட்கள் ஒரே இடத்திலிருந்ததே விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.