Skip to main content

யூடியூபர் டி.டி.எஃப். வாசன் மீது வழக்குப் பதிவு!

Published on 18/09/2023 | Edited on 19/09/2023

 

Case registered against YouTuber TTF  Vasan

 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி நேற்று (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தனது வாகனத்தில் முன் சக்கரத்தை தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

 

இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் விழுந்து கிடந்திருக்கிறார். விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். எலும்பு முறிவுக்குக் கையில் கட்டு போடப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் டி.டி.எஃப் வாசன் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது. கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்த நிலையில் தான் சாகசம் செய்ய முயன்ற போது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்