Skip to main content

மாற்றத்தை பற்றி பேசும் தலைவர்களே, இளைஞர்களே,அரசியல் ஆய்வாளர்களே...சீமான் பேட்டி

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

இலங்கை தமிழர் படுகொலையில் பாரதிய ஜனதா காங்கிரஸ் மீது தற்போது குற்றம்சாட்டுவது தார்மீக நேர்மை அல்ல, எப்படி என்றால் போரை நடத்தியது காங்கிரஸ் ஆட்சி அதற்கு கூட நின்றது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும். ஆனால் அன்றைய வலிமையான எதிர்க்கட்சி பாஜக, ஒரு 2ஜி அலைக்கற்றை ஊழலுக்காக ஒரு மாசம் முப்பது நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிபோட்ட பாரதிய ஜனதா கட்சி  இலங்கை என்கிற பக்கத்து நாடு மக்களை கொன்றுகுவித்தபோது எங்களைப் போன்று இன சாவு என்று நீங்கள்  கதற வேண்டாம் ஒரு மனிதப்படுகொலை என்கின்ற முறையில் ஏதாவது அதை தடுக்க ஒரு வார்த்தை, ஒரு உறுப்பினர் பதிவு செய்ததை நீங்கள் பார்த்ததுண்டா. அன்று வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அதன் பிறகு ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன் மொழியும் போது நாம் எப்பொழுதும் சிங்களர் பக்கம் தான் நிற்க வேண்டும் அத்வானி பேசிய  பதிவுகள் எல்லாம் இன்றும் உள்ளது.

 

seeman

 

சிங்களர்கள் ராமனின் வாரிசுகள் வம்சாவளியினர் தமிழர்கள் இராவணனின் வம்சாவளியினர் எனவே சிங்களர் பக்கம்தான் நிற்க வேண்டும் என்று பேசிய பதிவுகள் எல்லாம் இருக்கிறது. காங்கிரஸ் கொன்றுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அன்று பாஜக செய்தது என்ன?

 

 

கூட்டணி பற்றிய கேள்விக்கு.. 

 

நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள் என்றால் கூட்டணி வைத்தாலும் திட்டுவது கூட்டணி வைக்காமல் தனியாக நின்றாலும் திட்டுவது இது ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

 

 மாற்று என்பது எப்படி, நானாவது இன்னொரு தலைமுறை பிள்ளைகளுக்கு நம்பிக்கையாக நின்று விட்டு போகிறேனே. நீங்க ஏன் என் தற்காலிக வெற்றியைப் பற்றிக் கவலைப்பட சொல்கிறீர்கள்.  கூட்டணி வைத்து வென்றவர்கள் சாதித்தது என்ன?

 

எல்லாருமே வருவது மாற்றம் மாற்றம் என்று சொல்வது பிறகு  அவர்களுடனே சேர்ந்து பெரிய ஏமாற்றத்தை கொடுப்பது. மாற்றம் என்று பேசுகிற தலைவர்கள், மாற்றத்தை பற்றி சிந்திக்கும்  இளைஞர்கள், அரசியல் ஆய்வாளர்களிடம் நான் கேட்பது எதில்  இருந்து மாற்று, எப்படிப்பட்ட மாற்று எந்த கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றத்தை கேட்கிறீர்கள். 

 

மாற்றம் என்று பேசிவிட்டு பின்னர் அவர்கள் கூடவே துணை நின்று அவர்களே ஆட்சி அமைக்கக் செய்வது   என்பது எப்படி  மாற்றமாக இருக்கும்.  அது பெரிய ஏமாற்றமாகதானே இருக்கும். அதை செய்ய நாங்கள் தயாராக இல்லை. அதனால் நாங்கள் தனித்துதான்  போட்டியிடுகிறோம். எங்களுக்கு தனித்த தத்துவம் இருக்கிறது. நாங்கள் தனித்து பாதையை கொண்டிருக்கிறோம் எனவே தனியாக தொடர்ச்சியாக பயணிப்போம் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்