உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு!
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. இவ்வழக்கில், கடந்த 1ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு, தலைமை நீதிபதி வராததால், அன்று தீர்ப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.