Published on 15/07/2018 | Edited on 15/07/2018

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் இரட்டை திருமாளிகை திருப்பணிகளில் முறைகேடு, மற்றும் பழமையான கற்சிலைகள் கடத்திய புகார் மனு விசாரணையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை திருப்பணிகள் கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியம், ஸ்தபதி மாமல்லபுரம் நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது சிவ காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.