அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில், வழக்கானது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதேநேரம் ஜாமீன் பெற செந்தில்பாலாஜி தரப்பு முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக, வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்த வழக்கு நேரடியாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.