தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை மதுரை ஹைகோர்ட் பென்ச் அதிரடியாக ரத்து இந்த வழக்குகள் தேவையில்லாமல் போடப்பட்டுள்ளது என்றும் உடனடியாக 6 வழக்குகளையும் நீக்க வேண்டும் என்று போலிஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாநகரில் உள்ள 12 காவல்நிலையங்களில் மக்கள் அதிகார அமைப்பின் மீது சுதந்திரத்திற்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் திருச்சி மாநரக போலிசார்.
திருச்சியில் மாநகர காவல்துறையினர் மூலம் திருச்சியில் உள்ள காண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வழக்கு, செசன்ஸ் காவல்நிலையத்தில் 2 வழக்கு, கே.கே.நகர் காவல்நிலையம், கோட்டை காவல்நிலையம், உறையூர்காவல்நிலையம், தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல்நிலையம் ஆகிய இடங்களில் தலா 1 வழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
இந்த புகார் மனுக்கள் அனைத்துமே சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் உள்ள எஸ்.ஐ.க்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் அதிகார அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
என்ன வழக்கு என்று விசாரித்ததில் இது தாண்டா சுதந்திரம் என்கிற தலைப்பில் விவசாயிகளிடமிருந்து நிலம் பறிப்பு ! மீனவர்களிடம் இருந்து கடல் பறிப்பு, மாணவர்களுக்கு கல்வி மறுப்பு ! , தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, காடு, மலை, கனிமவளங்கள் கார்ப்பரேட்டுக்கு, பெரியாருக்கு மாலை போட தடை, மெழுகுவர்த்தி கையில் ஏந்தினால் சிறை, இம் என்றால் சிறை, ஏன் என்றால் NSI என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டியிருந்தார்கள். இந்த போஸ்டர்கள் கூறித்து எஸ்.ஐ.களிடம் இருந்து புகார் கொடுக்க சொல்லி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
குறிப்பிட்டு யார் பெயரில் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதிலிருந்தே இவர்கள் திட்டமிட்டு மக்கள் அதிகார பொறுப்பில் உள்ளவர்களை குறி வைத்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் மக்கள் அதிகார பொறுப்பளார்கள்.