Published on 04/11/2018 | Edited on 04/11/2018

ரன்வீர் ஷா தொடர்புடைய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை கிண்டி ரேஸ் கோரஸ் பகுதியிலுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா அலுவலகத்தில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம்தான் ரன்வீர்ஷா மற்றும் அவரது நண்பர் கிரண்ராவ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. மீண்டும் இந்த அதிரடி சோதனையை சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தற்போது மேற்கொண்டு பல சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ரன்வீர் ஷா தொடர்புடைய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சுந்தரம் மற்றும் கூடுதல் டி.எஸ்.பிஅசோக் நடராஜன் ஆகியோர் கூறினர்.