Published on 01/03/2022 | Edited on 01/03/2022
![The car suddenly caught fire! The driver who survived](http://image.nakkheeran.in/cdn/farfuture/1SbmJAgavIGEGZIxRFhzNFldwLlpsv5OffvK-nJba9A/1646110550/sites/default/files/inline-images/th_1844.jpg)
திருச்சி மாவட்டம், மரவனூர் அருகே மணப்பாறை வையம் பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் திண்டுக்கலில் இருந்து திருச்சிக்கு தனது காரில் வந்துள்ளார். அப்போது கண்ணுடையான்பட்டி அருகே வந்தபோது, அவர் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர், கதவை திறந்து வெளியே வந்துள்ளார். நல்வாய்ப்பாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
கார் பாதி எரிந்து நாசமானது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர். இது குறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.