நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் வாக்குகள் எண்ணப்படாத நிலையில் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மறு தேர்தல் நடத்தலாமா? அல்லது வாக்கை எண்ணலாமா? என்பதை வழக்கின் மனுதாரர்களின் இருதரப்பும் பேசி முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு 30 லட்சம் செலவானது. எனவே மறுதேர்தல் சாத்தியமற்றது எனக் கூறிய விஷால் தரப்பு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என வாதிட்டது. தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமாக மறு தேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பு வாதம் செய்தது.
இந்நிலையில் நடிகர் சங்கதிற்கு மறு தேர்தல் நடத்துவதா? அல்லது நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா? என நடிகர் விஷால் தரப்பும், ஏழுமலை தரப்பும் செப்டம்பர் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.