Skip to main content

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள் - தமாகா யுவராஜ் பேச்சு!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020


சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஞாயமான முறையில் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் குறுகிய காலத்தில் சின்னத்தை பெற்று 75 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தர்மத்தை மீறி தமாக வேட்பாளர்கள் போட்டியிடும் இடத்தில் அவர்களும் போட்டியிட்டுள்ளனர். இதுகுறித்து தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். இதுபோன்ற நடவடிக்கையை தவிர்த்திருந்தால் தமாக இன்னும் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கும். திமுக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத வகையில் அனைத்து வேலைகளையும் செய்தது. தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 50 சதவீதமான வெற்றியை மட்டும் பெற்றுள்ளது குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. குழப்பம் ஏற்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.



தமிழக அரசு பொங்கலுக்கு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் நேரத்தில் வெளியூர்களுக்கு செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும், இதனை சமாளிக்க 20 சதவீத பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. பல அறிஞர்களை உருவாக்கிய ஜே என் யூ பல்கலைகழகம் தற்போது தவறான வழிகாட்டுதலால் தேசத் துரோகிகளை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார். இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் பல பொருட்களில் ஜிஎஸ்டி வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க தமாகா வலியுறுத்தும். இவருடன் கட்சியின் மாநில பொது செயலாளர் வேல்முருகன், மாநில துணைத்தலைவர் அருணேஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ், துணை செயலாளர்கள் ராஜா சம்பத், வைத்தி, ஜெமினி ராதா, நகர தலைவர் மக்கின், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கணேஷ், சாய் முரளி, ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கனமழை எதிரொலி; பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 Heavy rain echoes; Notification regarding school holidays

அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த சென்னை வானிலை மைய அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

என். ஐ.ஏ அதிரடி சோதனை; பென்டிரைவ், செல்போன்கள் பறிமுதல்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 N. AI Action Test; Confiscation of pen drives, cell phones

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனையில் நடைபெற்ற வருகிறது. அதேபோல ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.