Skip to main content

காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை; ஜாமீனுக்காக காத்திருக்கும் செந்தில் பாலாஜி

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

Bypass surgery at Kaveri Hospital; Senthil Balaji is awaiting bail

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

அதே நேரம் மருத்துவமனை தரப்பிலிருந்து செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இந்த அறுவை சிகிச்சையானது காவேரி மருத்துவமனையில் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த வழக்கில் இன்று 10 மணிக்கு மேல் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்புக்குப் பிறகு அவர் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவையும் மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்