Published on 13/12/2019 | Edited on 13/12/2019
மத்திய அரசின் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் சென்னையில் மறுபயன்பாடுள்ள பொருட்களை வாங்க, உலர் கழிவுகளை விற்க இணையதளம் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்கான இணையதள முகவரி: www.madraswasteexchange.com ஆகும். இந்த சேவையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் பிரகாஷ், இணையத்தளத்தை பயன்படுத்தி திடக்கழிவுகளிலிருந்து மாநகராட்சி தயாரிக்கும் மறுபயன்பாடு கொண்ட பொருட்களையும் இணையதளத்தில் வாங்கலாம். மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள உலர் கழிவுகளையும் இணையதளம் மூலம் விற்றுக்கொள்ளலாம். உலர்கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் குப்பையின் அளவு குறைந்து நிலம் மாசுபடுதல் தவிர்க்கப்படும் என்று கூறினார்.