
அரியலூர் அருகே பெண் ஒருவர் சடலமாக மூட்டையில் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் பல நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் அருங்கால் பகுதியில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மூட்டை ஒன்று மிதந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் மீட்பு படையினரின் உதவியுடன் கிணற்றில் இறங்கி அந்த மூட்டையை வெளியே கொண்டு வந்தனர். அதனுள் சோதனை செய்தபோது பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையிலிருந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் செல்வி என்ற பெண் ஒருவர் தனது தோழிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த மூட்டையைக் கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து கரூரில் தலைமறைவாக இருந்த செல்வியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூட்டை மிதந்ததும், அதனைத்தொடர்ந்து அதில் பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.