Skip to main content

ரெட் அலர்ட்டுக்கு உடைந்த முக்கொம்பு அணை தப்புமா ?

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
MULLAI

 

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி 9 மதகுகள் உடைந்து விழுந்தன. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கின. இதற்காக ஆற்றுக்குள் முதல் கட்டமாக மணல் மூட்டைகள் அடுக்கும் பணியும், அடுத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து கொட்டும் பணியும் நடந்தது. இருப்பினும் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. பாறாங்கற்களின் இடைவெளி வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. 


இதனை தடுத்து நிறுத்துவதற்காக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்ததை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். 

 

தண்ணீர் அதிகமாக வந்ததால் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் வேகமாக வெளியேறியது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்த இடம் சுமார் 35 அடிக்கும்மேல் ஆழமான பகுதியாகும். அந்த இடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. காவிரியில் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்த தண்ணீரை புள்ளம்பாடி, அய்யன், பெருவளை வாய்க்கால்களில் திறந்து விடுவதற்காக தேக்கியதால் தான் கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகரித்தது. இதனால் தான் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன’ என்றார். இந்த நிலையில் பணிகள் முடிவடைந்தது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தமிழகத்திற்கு வரும் ஞாயிறு ரெட் அலர்ட் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். தற்போது அமைந்துள்ள இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு இது தாக்குபிடிக்குமா என்பது எல்லோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 

 

இந்த நிலையில் பொதுப்பணிதுறை அதிகாரிகள் சிலரிடம் பேசிய போது, கனமழை அறிவிப்பினால் விவசாயிகள் அச்சமடைய தேவையில்லை. பெரிய பாறாங்கற்கள் கொண்டு ஷட்டர்கள் உயரத்திற்கு அடைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் கதவனைக்கு அதிக தண்ணீர் வந்தாலும் அதை காவிரியில் திருப்பி விடும் அளவிற்கு பலப்படுத்தி வைத்திருக்கிறோம். உடையாத மற்ற ஷட்டர்களையும் தொடர்ந்து கண்காணித்து பராமரித்து வருகிறோம். மணல் முட்டைகள் கொண்டு அடைக்கும் பணியும் தற்போது முடிவடைந்துள்ளது. அந்த மணல் மூட்டை சரிந்ததும் சரி செய்து வைத்திருக்கிறோம் என்று நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி வருகிறார்கள்

ஆனாலும் இயற்கை முன்பு அனைவருமே சமம் தான். முக்கொம்பு இந்த ரெட் அலர்ட்டுக்கு தப்புமா என்பதே எல்லோருடைய கேள்வியாகவே இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முக்கொம்பு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு; பூக்களைத் தூவி வரவேற்ற விவசாயிகள்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

mukkombu dam water opened for paddy cultivation in delta districts

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து விட்டார். இதற்கு முன்னதாக முதல்வர்  திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

மேட்டூர் அணையில் இருந்து படிப்படியாகத் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தைக் கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்பு மேலணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மாயனூரில் இருந்து திருச்சி முக்கொம்பு மேலணையை நேற்று இரவு வந்தடைந்தது. அதன்பிறகு முக்கொம்பில் இருந்து  தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களைத் தூவினர்.

 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கன அடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மதியம் சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைக்கிறார்கள். கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரைச் சென்று சேரும்.

 

மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" எனத் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

Next Story

சுற்றுலா சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்; 19 வயது இளைஞர்கள் கைது

Published on 17/05/2023 | Edited on 18/05/2023

 

covai woman mukkombu incident involved three nineteen years old youngsters 

 

சுற்றுலா சென்ற பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

 

கோவை மாவட்டம் கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த விக்டர் ராஜ் மனைவி சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சரண்யா மற்றும் அவரது குடும்பத்து பெண்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, அங்கு வந்த எலமனுர் அண்ணாநகரை சேர்ந்த ரா.சங்கிலி (என்கிற) தேவா (வயது 19), க.முனீஸ்வரன் (வயது 19), கோ.வினீத் (வயது 19) ஆகிய மூவரும் சேர்ந்து அவர்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளனர்.

 

இதை தட்டிக்கேட்ட சரண்யாவை அடித்து உதைத்து பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டதுடன், தகராறு செய்த இளைஞர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஜீயபுரம் போலீசார் மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.